📚நிலாச்சோறு📚முதல் பக்கம்



நிலாசோறு  ஆன்லைன் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டி. : என்ன செய்ய வேண்டும் ? 

1. முதலில், நீங்கள் கூகிள் வகுப்பறை Google Classroom என்னும் 'ஆப்' உங்கள் மொபைல்-ல் 'டவுன்லோட்' செய்து 'இன்ஸ்டால்' செய்யவும். 

உங்கள் பாடங்கள் அசைன்மென்ட் ஆகியன பார்க்க : கூகிள் வகுப்பறை :: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.classroom&hl=en 

நீங்கள் அதை இன்ஸ்டால் செய்து மேலே உள்ள லிங்க் களை க்ளிக் செய்தால் நீங்கள் அப்போது கூகிள் வகுப்பறையில் சேர்ந்து விட்டீர்கள் என்பதை கீழே உள்ள படம் சொல்கிறது.... 

மாதிரி வகுப்பறையின் படம்.
இந்த கூகிள் வகுப்பறையில் (GCR) நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள், பார்க்க வேண்டிய விடியோக்கள், செய்ய வேண்டிய அசைன்மென்ட் ஆகியன பற்றிய தகவல் அப்பபோது வரும். கட்டாயம் படிக்க வேண்டும். 

கூகிள் வகுப்பறையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி, இங்கே ஒலிவடிவ பக்கம்  படியுங்கள்.  https://nilassoru.gseva.org/2020/09/how-to-work-in-google-classroom.html  


2. அடுத்தது : ஆன்லைன் வழி வகுப்பு : கூகிள் மீட் :  மாணவர்கள் வாட்சப் நிலாசோறு குரூப் தகவல்களை மொபைல் இல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
கூகிள் மீட் : இதை டவுன்லோட் செய்ய தேவையான :: லிங்க் : 

பொதுவாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு வகுப்பு அடையாள எண் (Code) உள்ளது. அது அடிக்கடி வாட்சப் குழுவில் ஷேர் செய்யப்படும். (உதாரணம்:  https://meet.google.com/cug-igag-ipf ). அதை நீங்கள் க்ளிக் செய்தால், உங்களுக்கு கூகிள் மீட் ஆப் திறந்து வகுப்பில் பங்கு கொள்ள முடியும். 

இதைத் தவிர, வேறு சில மென்பொருள்களும் (ஆப்ஸ்) 2022 வருடத்தில் பயன் படுத்தப் படும் : லுமியோ https://suite.smarttech-prod.com/library/recents   ||    எட் பசில்  https://edpuzzle.com/video/eZH4c3JlXKE    ||    டீச்மின்ட்    https://www.teachmint.com/dashboard

மாணவர், மாணவியருக்கு புத்தகம் நோட்டு  தருவது அல்லது இணைய தள தொடர்பு, டேப்லெட் , பண உதவி,  போன்றவை. மொபைல் வழியே பாடங்கள் புரிந்து கொள்ள இந்த குழுவில் உள்ள ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். 

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை (கொரோனா காலம்  முடிந்ததும் ) நன்கொடை தந்தவரோ  ஆசிரியரோ இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று  மாணவர்களிடம்  முன்னேற்றம் உள்ளதா என்று அறிவார்கள்.  

கூகுளை வகுப்பறையில் நடத்தப்படும் பாலவிகாஸ் எனும் வகுப்பு எல்லோருக்கும்  கட்டாயம். அதற்கு கிடைக்கும் படிப்பு ஆதாரங்கள்  இந்த  இணைய தளம் இருந்து பெறப் படுகிறது. 
  • பாலவிகாஸ் / வித்யவாஹினி  தொடர்பான மற்ற  தளங்கள் : 

இப்போது உள்ள திட்டம் (காண்க லிங்க் : )  இதற்காக மாணவர்களை எப்படி தேர்ந்தெடுப்போம் ? 

  • மாணவர்கள் எவ்வளவு முறை  ஆன்லைன் பள்ளிப் பாட (SUBJECTS) வகுப்புகளுக்கு வந்தார்கள் ; அதில் எவ்வளவு முறை அசைன்மென்ட் செய்து நிறைய  மதிப்பெண் எடுத்தார்கள்; பள்ளி ஆசிரியரின் கருத்து என்ன...

  • மாணவர்கள் எத்தனை முறை பாலவிகாஸ் வகுப்பில் கலந்து கொண்டார்கள், அதில் எத்தனை பக்தி செய்யுள் (sloka) மனப்பாடம் செய்தார்கள், கதைகளில் வரும் கேள்விகளுக்கு எவ்வளவு முறை பதில் தந்தார்கள்; 

  • மாணவர்கள் வாழ்க்கை கல்வி, நேர்மை, ஒழுக்கம் , நட்பு, உதவுதல்,  போன்ற குணங்களை எவ்வளவு கற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறார்களா.... 
இதை நீங்கள்  அக்கறையுடன் பழக வேண்டும்...

வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்  மாதம் ஒரு முறை மட்டுமே நியாயமான காரணத்தால்  விடுமுறை எடுக்கலாம். 

அவ்வப்போது  கேட்கப்படும் ஃபாரங்களை  பூர்த்தி செய்து "submit" செய்ய வேண்டும் . 

ஆன்லைன் வகுப்பில், மாணவர்கள் கேமரா முன் தங்கள் முகம் தெரியுமாறு (தோள்கள் வரை ) வகுப்பு நேரம் முழுவதும் அமர வேண்டும். ஆசிரியர் உங்கள் முகத்தைப் பார்த்தால்தான் சரியாக பாடத்தை நடத்த முடியும். ஆசிரியர் சொல்லும்போது மட்டும் உங்கள் பாட புத்தகத்தை படிக்கலாம்.

ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது  மாணவர்கள்  பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது, வாட்சப் பேஸ்புக் முதலியன வழியே சாட் செய்வது  போன்றவை   பாடத்தை உதாசீனம் செய்வது போலாகும். நிலாசோறு  போன்று  மாணவர்களின் முன்னேற்றம் மீது மிகவும் அக்கறை கொண்ட ஆசிரியர் குழுவை  மாணவர்கள்  கோட்டை விட வேண்டாம்  

எந்த ஒரு சமயத்திலும்,  கேள்வி கேட்கப்படும் மாணவர் மட்டுமே மைக் ஆன் செய்து பேச வேண்டும். மாணவர் தனது பெற்றோருடைய மொபைல் பயன் படுத்தினால் பெற்றோரது  கூகிள் அக்கௌன்ட் -ல் பெற்றோர் பெயர் கூட மாணவர் பெயரையும் சேர்க்க வேண்டும். 

இந்த விதிகள் மாணவர்களுக்கு பொருந்தவில்லை எனில் அவர்கள் மகிழ்ச்சியாக வீட்டில் டிவி பார்த்துக்கொண்டோ, தெருவில் கிரிக்கட்  விளையாடிக்கொண்டோ, IPL மேட்ச் பார்த்துக்கொண்டோ இருக்கலாம். அல்லது அவர்கள் பெற்றோர்களின் வீட்டு வேலை அல்லது தொழிலில் உதவி செய்து கொண்டு இருக்கலாம்.