Three Questions by Leo Tolstoy: 8th Std: English
ரஷ்யாவில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9 வயதில் தந்தையையும் இழந்தார். சிறுவனாக இருந்தபோது, படிப்பில் கவனம் செல்லவில்லை. சட்டம், பாரம்பரிய மொழிகள் கற்றார். *குடும்பச் சொத்தில் தனக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு, தனது கிராமத்து விவசாயிகளின் வறுமையைப் போக்கவும் அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி புகட்டவும் நலத்திட்டங்களைத் தொடங்கினார். 16 வயதில் எழுதத் தொடங்கியவர், முதலில் சிறுகதைகள் எழுதினார். ‘The Childhood', The Boyhood'... நூல்களால் ரஷ்யா முழுவதும் புகழ் பெற்றார். இவரது மாஸ்டர் பீஸ் (Master Piece) எனப்படும் ‘வார் அண்ட் பீஸ்’ [War and Peace] நாவல் இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. 1877-ல் வெளிவந்த ‘அன்னா கரேனினா’ நாவல், இவருக்குப் புகழுடன் பணத்தையும் அள்ளிக் கொடுத்தது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்த பிறகு, அகிம்சை கோட்பாடு அவருக்குள் வலுப்பட்டது. அகிம்சை, எளிமை, ஏழைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். ஏழைகளுக்கு உணவளித்தார். *இந்திய விடுதலை இயக்கப் புரட்சி வீரர் தாரக்நாத் தாஸுக்கு இவர் எழுதிய புகழ்பெற்ற ‘எ லெட்டர் டு எ ஹிண்டு’ என்ற கடிதங்கள் அடங்கிய தனது நூலில், பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற அகிம்சைதான் வழி என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். *அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்த காந்தியடிகள் இதைப் படிக்க நேர்ந்தது. அதுமுதல் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அகிம்சை, சைவ உணவு உள்ளிட்ட பல கொள்கை களில் காந்திஜிக்கும் டால்ஸ்டாய்க்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இவரது நினைவைப் போற்றும் வகையில் காந்திஜி அங்கு தான் நிறுவிய ஆசிரமத்துக்கு இவரது பெயரைச் சூட்டினார். https://insertlearning.com/v1/share/j3db80b9
soaked with warm blood = இரத்தத்தால் நனைக்கப்படுகிறது

