பள்ளிகள் திறக்காதவரை கல்வித் தொலைக்காட்சியில் கல்வி கற்பதே சிறந்ததா ?


ஆம். உங்கள் வீடு தேடி வந்து கல்வி கற்க வாய்ப்பு தரும் வசதி கல்வித் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ளது. அதை நீங்கள் தவறவிட வாய்ப்பே இல்லை. அப்படி தவற விட்டால் உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ உங்கள் படிப்பில் ஆர்வம் இல்லை என்றுதான் பொருள். உங்களுக்கான கல்வி நேரத்தை மேலே உள்ள அட்டவணையில் பாருங்கள்.
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.
படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, வினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம். இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினா – விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் பயனடையலாம்.
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும்.
இப்போது உங்களுக்கு ஆங்கிலத்தில் Bridge Course எனப்படும் 8 க்கும் 9 க்கும் இடையிலான ஒரு கோர்வையான இணைப்பாக அல்லது பாலமாக இந்த பாடம் நடத்துகின்றனர். அவசியம் பார்க்க வேண்டும்.
இவற்றை நீங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு நிலாசோறு வகுப்புகள் மீண்டும் தொடங்கும்.
சரி. அது போகட்டும். உலக அளவில் கல்வியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் அயல் நாட்டு மொழிகளை பள்ளியில் எப்படி கற்க வேண்டும் என சொல்கிறது ? :
"அயல் நாட்டு மொழியில் தவறு இல்லாமல் எழுத திறமை வேண்டும் என்றால் அதற்கு முன்பு தவறு இன்றி பேச தெரிந்திருக்க வேண்டும். தவறு இல்லாமல் பேச ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்க வேண்டும். தமிழில் மொழி பெயர்த்து கற்றுக் கொண்டால் ஆங்கிலம் எப்போதுமே தவறாகவே இருக்கும். உங்கள் ஆங்கிலத்தை கேட்பவர்களும் படிப்பவர்களும் அதை எப்படி கிண்டல் செய்வார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியாது.
ஆரம்பத்தில் தமிழில் மொழி பெயர்ப்பு இல்லாமல் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், வெகு விரைவில் நல்ல ஆங்கிலம் நமக்கு வந்து விடும். ஆனால் தமிழில் மொழி பெயர்த்து கற்றோமானால் முதலில் சுலபமாக இருக்கும். ஆனால் கடைசி வரை கற்றபிறகும் நமது ஆங்கிலத்தில் பிழை இருக்கும்.
ஆகவே 9 ம் வகுப்பில் மொழிபெயர்ப்பு வாயிலாக ஆங்கிலம் கற்க விரும்பாதீர்கள்.
You have a choice to enjoy or realize the point from this picture below ...