Woman on Platform 8

இந்த வீடியோவில் என்னென்ன பார்த்தீர்கள் என்று நினைவு வையுங்கள் .. இரண்டு முறை ஓடும் போது பார்க்கலாம் .. கீழ் வரும் ஆறு (6) கேள்விகளுக்கு விடைகளை ஒரு பேப்பர் பேனா / பென்சில் எடுத்து எழுதவும் .. கேள்வி எண் மட்டும் எழுதலாம்
பிறகு, அதில் உங்கள் பெயர் எழுதவும் ..


1. மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ?

2. கடைசியில் வந்தவர் பனியன் கலர் என்ன ?

3. கை-உறை (குலோவ்ஸ்) அணியாதவர் எத்தனை ?

4. சோபா அல்லது சேர்-ன் கலர் என்ன ?

5. எத்தனை வீட்டில் காம்பவுண்ட் சுவர் இருந்தது ?

6. இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் ?




==============================================
 


"What student learns in class is backed up at home thro' School Book and teacher's Print-out". 

 
ஆங்கிலத்தில் இருப்பதை தமிழ் ஒலியாக  படிக்கும் போது, தமிழ் ஒலி சரியாக சொல்ல வேண்டும். அதாவது, எனில் அது Ka  வா அல்லது Ga வா என புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, || ட = da , ta   ||   த = tha , dha  ||   ப =  pa ,  ba  ||   ச =  sa ,  cha   ||    ஆகவே ஆசிரியர் பேசும்போது அந்த ஒலியை சரியாக கேட்கவேண்டும் ...   
இவற்றை வீட்டில் (ஸ்பெல்லிங் எழுத்து கூட்டி ) படித்து மனப்பாடம் செய்க
inferno (n)      =   இன்-ஃபெர்-நோ   =   அடக்க முடியாத பெரிய நெருப்பு தீ 
heaving (v)     =   ஹீ-வி-ங்   =   மூச்சு அடைக்கும் நெருக்கமான (கூட்டம்)
dismally (adv)    =   டி-ஸ்-ம-லி   =   மோசமான அளவு (தோல்வி) 
serenity (n)        =   செ-ரி-னி-டி  =  ஆழ்ந்த அமைதி  
encounter (v)     =   என்-க-வுன்-டர்  =   எதிர்பாராத கடினமானதை சந்தித்தல் 
clutched (v)       =    க்ல-ட்ச்-டு   =   கெட்டியாக பிடி  
imposing (adj)    =   இம்-போ-சிங்  =   பதில் சொல்ல முடியாத படி கட்டாயம் செய்.     
embarrassed (v)  =   எம்--ராஸ்-டு   =   பதில் சொல்ல திணறு, தயக்கம்       
nuisance (n)        =    நியு-சென்ஸ்   =   தொல்லை  
staggered (v)     =    ஸ்டாக்-கர்டு    =    தள்ளாடி நட  =  தூர தூர 
wagging (v)     =    வே-க்-கிங்  =       (வால்/கொடி)  ஆட்டு 
resentfully (adv) =    ரி-சென்ட்-ஃபுலி     =   வெறுப்புடன் 
grinning (v)         =    க்ரின்-னிங்     =     புன்முறுவல் செய்து 
squatting (v)     =    ஸ்குவாட்-டிங்     =    சம்மணம் இட்டு  உட்காரு 
hustling (v)           =    ஹஸ்-லிங்     =    சலசலப்பு  (கசமுசா)  
shrieked (v)         =    ஷ்ரீக்டு      =     ஓங்கிய குரலில் உரத்த குறுவொலி செய்; கிறீச்சிடு
mowed (v)         =    மோவ்டு      =    அழுத்தி கத்தரி 
patronizing (adj)     =    பேட்-ற-நை-சிங்     =    ஆதரவு கொடு  ;  ஏற்றுக் கொள் ;
obviously (adv)     =    ஆப்-வியஸ்-லி     =    கண் எதிரே , நன்றாக பார்க்க முடியும்  
jolted (v)             =        ஜோல்-டட்      =      அதிர்வு தந்து ,  தூக்கி எறி   

கேள்வி பதில்கள் பக்கம் 31, 32, 34 உள்ளதில் இப்போது பார்க்கலாம் . 👈

மாணவர்கள்  பாட புத்தகத்தை திறந்து இந்த பக்கம் உள்ள இடத்தை தேர்வு செய்து பிறகு பாடத்தையும் இந்த திரையையும் ஆசிரியர் விளக்குவதையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு வாக்கியத்தையும் (ஒரு பத்தி) படித்து  அவர்களுக்கு என்ன புரிந்தது என்று சொல்ல வேண்டும்.  உங்கள் பாடத்தில் இருந்து முதல் பகுதி மட்டும் இங்கு நீங்கள் படித்து ரீடிங் பிராக்டிஸ் செய்யவும் புரிந்து கொள்ளவும் தரப்பட்டுள்ளது; முழு பாடத்திற்கும் இந்த மாதிரி விளக்கம் தர இயலாது; ஆனால் கேள்வி-பதில் பகுதியில் வார்த்தைகள் + பொருள் + இலக்கணம் விளக்கப்படும் 

It was   அது இருந்தது 
my second year   இரண்டாம் வருடமாக 
at boarding school.   பள்ளி தங்கும் விடுதியில் 


I was sitting   நான் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் , 
 on platform no. 8    எட்டாவது பிளாட்பாரத்தில் 
 at Ambala station   அம்பாலா ஸ்டேஷனில்  
was waiting     காத்திருந்து கொண்டு 
the northern bound train.    வடக்கே போகும் ரயிலுக்காக 


I think    நான் நினைக்கிறேன் 
I was about twelve    எனக்கு சுமார் பன்னிரண்டு வயது இருக்கும் 
at the time.     அப்போது 


My parents     எனது பெற்றோர் 
considered me old enough     ஓரளவு நான் பெரியவன் ஆகி விட்டேன் என 
to travel alone      தனியாக பிரயாணம் செய்ய 
I had arrived by bus   பஸ்சில் வந்து இறங்கினேன் 
at Ambala அம்பாலாவில் 
early in the evening. காலையில் வெகு சீக்கிரம் 


Now    இப்போது  
there was a wait காத்திருக்க வேண்டி 
till midnight  நடு இரவு வரை 
before my train arrived.  எனக்கு ரயில் வரும் வரை 


Most of the time   பல சமயங்களில் 
I had been pacing up and down   முன்னும் பின்னும் நடந்து கொண்டு 
the platform,   பிளாட்பார்ம் மீது 
browsing at the bookstall, or   புத்தக கடையில் தேடுவது அல்லது 
feeding broken biscuits  பிஸ்கட்களை உடைத்து போடுவது 
to stray dogs: தெரு நாய்களுக்கு  


trains came and went, and  ரயில் வந்து சென்ற போயின 
the platform would be quiet  பிளாட்பார்ம் அமைதியாக  
for a while and இருக்கும் சில நிமிடங்களுக்கு 
then, when a train arrived   அதன் பின் ஒரு ரயில் வந்தால் 
it would be   உண்டாகும் ,
an inferno of heaving,  ரயிலின் மூச்சு இழுத்து விடும் சத்தம் 
shouting, கூச்சல் 
agitated human bodies. பரபரக்கும் மனித உடல்கள் 


As the carriage doors opened,     ரயில் பேட்டியின் கதவுகள் திறந்த போது 
a tide of people         கூட்டமான மனித அலைகள் 
would sweep down upon         மேலே பாய்ந்து விடும் 
the nervous            பயந்துள்ள  
little ticket-collector        குள்ளமான  டிக்கெட் சோதனை செய்பவர் 
at the gate and      கேட் அருகே உள்ள 
every time                   ஒவ்வொரு முறையும்  
this happened         இது நடந்தது 


I would be caught        நான் மாட்டி  கொள்வேன் 
in the rush and     இந்த கூட்டத்தில் 
swept outside the station. மேலும் ஸ்டேஷன்-ஐ விட்டு வெளியே தள்ளி விடும் கூட்டம் . 

இப்போது, (மேலே ரீடிங் பிராக்டிஸ் முடிந்து), கேள்வி பதில் வாயிலாக நாம் இலக்கணமாக தவறு இல்லாமல் (மற்றவர்கள் உங்கள் தவறு உள்ள, பிழை உள்ள ஆங்கிலத்தை கண்டு/கேட்டு சிரிக்காமல் இருக்க) இதை படிக்கவும் அதை போலவே வேறு ஒன்று உருவாக்கவும் தெரிந்து கொள்ளலாமா ? 

(உங்கள் புத்தகத்தில் பக்கம் 32 )  D. Answer the following questions. 
 
1. Where was Arun sitting? அருண் எங்கே அமர்ந்து இருந்தான் ?
Answer: Arun was sitting on platform no. 8 at Ambala station

அந்த விடையை எப்படி தவறு இல்லாமல் எழுதினார்கள் என பார்க்கலாமா ? 
ஒரு வாக்கியத்தில் என்னென்ன இருக்க வேண்டும் ? 
SUBJECT மற்றும் PREDICATE
அதாவது என்ன உள்ளது, என்ன செய்கிறது ?
SUBJECT இல் என்ன உள்ளது எப்படி உள்ளது என சொல்லும் 
PREDICATE இல் SUBJECT-ல்   என்னவாக உள்ளது, எப்படி உள்ளது,  என்ன செய்கிறது எப்படி செய்கிறது எங்கு செய்கிறது என சொல்லும் ; அவ்வாறு அதன் விளைவை எது ஏற்றது என்பது OBJECT எனப்படும். அதாவது ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு subject ஒரு verb ஒரு object இருக்கிறது.   
  
SUBJECT இல் noun இருக்க வேண்டும் ; அதாவது மனிதன் அல்லது செயல் அல்லது பொருள் அல்லது இடத்தின் பெயர் ; இங்கு என்ன பெயர் உள்ளது ? ARUN என்ற சிறுவன் பெயர் . ARUN என்பது பெயர், அதாவது NOUN

அடுத்து அந்த ARUN என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான் ? அதுவே PREDICATE . ஓகே . இப்போது ARUN was sitting on platform no.8 at Ambala Station . 
அதாவது was sitting என்றால் உட்கார்ந்து கொண்டு இருந்தான் .. 
எங்கே உட்கார்ந்து கொண்டு ? on platform no.8 at Ambala Station. 
அதாவது அம்பாலா ஸ்டேஷன்-ல் 8-வது பிளாட்பார்ம்-ல் உட்கார்ந்து கொண்டு இருந்தான். ஆகவே இந்த வாக்கியத்தில் , 
"ARUN" என்பது subject . 
"was sitting on platform no.8 at Ambala Station" , என்பது predicate. 
PREDICATE இல் என்னென்ன இருந்தன ? 
was sitting = இது VERB . அதாவது செயலை குறிக்கும் சொல். 
on = இது PREPOSITION  . அதாவது இடத்தை குறிக்கும் சொல்.
platform no.8 = இது இடத்தின் பெயர் ; பெயர் ஆதலால் NOUN; ஆனால் இது subject அல்ல OBJECT 
at = இதுவும் இடத்தை குறிக்கும் சொல் அதாவது PREPOSITION .    
Ambala Station = இது இடத்தின் பெயர் ; பெயர் ஆதலால் NOUN ; ஆனால் SUBJECT அல்ல OBJECT.

இதே போல மற்ற கேள்வி பதில்களை பார்ப்பதற்கு முன் கீழே பாருங்கள். 


2. What was the expected arrival time of the train? ரயிலின் எந்த நேரம் வரும் என எதிர்பார்த்தார்கள் ? 
Answer: The expected time of the train’s arrival      was at twelve o’clock midnight.
                                   SUBJECT                           +                    PREDICATE
(எதிர்பார்க்கப்படும் ரயிலின் வரும் நேரம்) +  (நள்ளிரவு 12 மணி ஆகும்) 

3. What were the sight Arun had seen on the platform? பிளாட்பாரத்தில் அருண் பார்த்த காட்சிகள் என்னென்ன ? 
Answer:   Arun              saw a tide of people, the cries of various vendors and the newspaper boy.
                SUBJECT  +  PREDICATE 
                (அருண்)  +   (பார்த்தவை மக்கள் அலை, வியாபரி மற்றும் செய்திதாள் பையனின்  கூச்சல் ஆகியன).  

4. What did the vendors sell? வியாபாரிகள் என்னென்ன விற்றார்கள் ? 
Answer: The vendor         sold curds, lemons, sweet meat and newspapers.
               SUBJECT     +     PREDICATE       
               வியாபாரி     விற்றவை  தயிர், எலுமிச்சை, இனிய மாமிசம், மற்றும் செய்தித்தாள் ஆகியன 

மேலே சொன்னது போன்று மீதி உள்ள விடைகளுக்கும் SUBJECT, PREDICATE தேடவும். 

5. How did the women appear? அந்த பெண் எவ்வாறு இருந்தாள் ? 
Answer: The woman had a pale face and dark kind eyes. She wore no jewels and was dressed very simply in a white saree.

6. Where was Arun travelling to? அருண் எங்கே பிரயாணம் செய்து கொண்டு இருந்தான் ? 
Answer: Arun was travelling to his boarding school.

7. What did the woman buy for him? அந்த பெண் அவனுக்கு என்ன வாங்கினாள் ?  
Answer: The woman bought samosas and jalebies. She also ordered tea for Arun.

8. What was the advise of Sathish’s mother? சதீஷ்-ன்  தாய் சொன்ன அறிவுரை என்ன ? 
Answer: Sathish’s mother advised Arun not to talk to strangers and to be very careful of them.

9. What were the Arun’s last words?  அருண் சொன்ன கடைசி சொற்கள் என்ன  ? 
Answer: Arun’s last words were “Goodbye - mother”.

10. What was the reaction of the woman at the end? அந்த முனையில் இருந்த பெண்ணின்  பதில் எப்படி இருந்தது ?
Answer: When Satish’s mother was talking, she did not listen to her. But she was looking at Arun, as the train moved.

ஆங்கிலம்.. யூனிட் 1... Women on Platform 8... 8-வது பிளாட்பாரத்தில் ஒரு பெண்மணி.