கடைசி உதவியா , அறிவிப்பா , எச்சரிக்கையா ?.

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கீழே உள்ள நிபந்தனை / கண்டிஷன்-க்கு நீ ஒப்புக் கொண்டால் மட்டுமே பாடம் நடத்தப்படும்.. 

இந்த வகுப்பில் நீ  தனியாக நின்று கேள்வி கேட்கலாம் அல்லது பதில் சொல்லலாம் ; வேறு எந்த வகையிலும் யாரிடமும் நீ பேசக் கூடாது. நீ தெருவில் குரைக்கும் நாய் அல்ல. 

பாடம் நடத்த எனக்கு உன் பள்ளி தந்த நேரம் 40 நிமிடம் மட்டுமே. அதில் ஒரு நிமிடம் கூட வீண் செய்ய உனக்கு உரிமை இல்லை. 

உனக்குத்  தெரியாததை ஆசிரியர் சொல்லும்போது, புத்தகத்தில் இல்லாததை சொல்லும்போது புத்தகத்தில் எழுதிக் கொள். 



விலங்குகள் பறவைகள் ஆகியவற்றிற்கு குறுகிய நேர நினைவு திறன் மிக குறைவு. அதாவது புதியதாக புரிந்து கொண்டதை அல்லது கவனித்ததை ஐந்து நிமிட நேரத்தில் அவைகள்  மறந்து விடும். 
ஒரு செயலை நீங்கள் நினைத்த படி அவைகள்  செய்ய வேண்டும் அல்லது செய்ய கூடாது என ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நீங்கள் அவற்றை விரட்டிக் கொண்டு இருந்தாலும் அதை மறந்து விட்டு உங்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருக்கும். 
உதாரணமாக ,  தெருவில் உள்ள நாய்கள் குரைக்கும் . நீங்கள் போய் அதை வீரட்டுவீர்கள். அவை அப்போது ஓடி விட்டு மீண்டும் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து குரைக்கும்.  இதே மாதிரி அவை செய்து கொண்டே இருக்கும். ஏன் அப்படி ? அவைகளுக்கு ஞாபகம், நினைவு அவ்வளவுதான். 
ஆனால் நீங்கள் அவை போல அல்ல. வகுப்பு ஆரம்பத்தில் ஒரு முறை சொன்னால் அதை வகுப்பு முடியும் வரை உங்கள் நினைவில் அது இருக்க வேண்டும். இன்று சொல்வதை  மார்ச் மாதம் 31 வரை மறக்க கூடாது

1. "குட் மார்னிங் சார்" தவிர, வேறு எதையும் எல்லோரும் கும்பலாக பதில் சொல்ல கூடாது. யாரை கேள்வி  கேட்டார்களோ அவர் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். 

2. வகுப்பில் நான் பேச மட்டும் தான் உரிமை உள்ளது. மாணவர்களுக்கு உரிமை  கிடையாது. ஏனென்றால், நான் சொல்ல வருவதை சொல்ல எனக்கு 40 நிமிடமே உள்ளது. அதில் நீங்கள் இங்கு வந்து உட்காரவே ஐந்து-பத்து நிமிடம் வீண் ஆக்கி விட்டீர்கள் . மீதி 30 நிமிடம் தான் உள்ளது. நேரம் வீண் ஆக்கினால் நான் உங்களுக்காக தயார் செய்த படம் / வீடியோ ஆகியவற்றை நீங்கள் பார்க்க முடியாமல்  இழந்து விடுவீர்கள். 

4. பாடம் நடத்தும்போது நன்றாக கவனிக்கவும். யாரிடமும் பேச வேண்டாம். 

5. பாடத்தில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு நேரம் போவது கடினமாக இருக்கும். எப்படா இந்த பீரியட் முடியும் என இருக்கும். ஆனால் ஆர்வம் உள்ளவர்களுக்கு ''ஐயோ என்னடா அதற்குள் முடிந்து விட்டதே, ...... அது புரியவில்லையே '' என தோன்றும். ஆனால், இரண்டு வித மாணவர்களுக்கும் 40 நிமிடம் போய் விட்டது. திரும்ப இதே நாள் இதே பீரியட் மறுபடியும் வராது. நீங்கள் விளையாட்டாக காலத்தை வீண் ஆக்கி கொண்டு இருக்கும் போதே, வாரங்கள் மாதங்கள், வருடங்கள், ஓடி திடீர் என நீங்கள் ஒரு நாள் வேலைக்கு போய் உங்கள் பெற்றோரை காப்பாற்ற வேண்டிய நிலை வரும். அப்போது தான் நீங்கள் போதிய அளவு படிக்கவில்லை , அறிவு வளரவில்லை என புரியும். ஆகவே இப்போதே யோசனை செய்யுங்கள். 

7. ஆசிரியர் சொல்லும்போது புரிந்ததை , புத்தகத்தில் இல்லாததை அதில் எழுதி கொள்ளுங்கள்.