Tenses of Verbs used in all lessons: Class 8



8-ம் வகுப்பில் வரும் அனைத்து புதிய "VERB" வார்த்தைகள், அவற்றுக்கு உரிய  நான்கு கால TENSES (present , present continuous , past tense -active voice , past tense - passive voice ) மற்றும் அவற்றின் பொருள் (MEANING)  ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன ; அதாவது நிகழ் காலம் , தொடர் நிகழ் காலம், இறந்த காலம் (active voice) , இறந்த காலம் (passive voice ) ஆகியவை.  

உதாரணத்திற்காக இங்கு இறந்த காலத்திற்கு மட்டுமே active voice , passive voice தரப் பட்டுள்ளது;  மற்ற காலங்களுக்கும் அவை (மாறி) வரும். அவ்வளவும் இந்த பேப்பர்-ல் சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு VERB எல்லா காலம் மற்றும் 
இரண்டு voice களில் சொல்லவேண்டும் எனில், ஒரு verb க்கு மட்டுமே, சுமார் 24 வரிகள் வரும் !!!!   எப்படி ? 

அதாவது மூன்று காலங்கள், ஒவ்வொரு காலத்திலும் நான்கு பகுதிகள், (3x4=12), பின்னர் மேலும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன, அதாவது (ACTIVE VOICE ) செய்வனை, (PASSIVE VOICE ) செயற்பாடு வினை என்று .  ஆகவே, மொத்தமாக, (3x4x2=24) வடிவம் ஆகிறது அல்லவா ? மாணவர்கள் இதைப் படித்து இவற்றில் என்னென்ன உங்களுக்கு தெரியாது என குறித்துக் கொள்ளவும். இதை மனப்பாடம் செய்வதாக இருந்தால், verb வார்த்தைகள் ஏன் எப்படி வேறு வேறு காலத்தில் மாறுகிறது என புரிந்து கொள்ள வேண்டும். 

உதாரணம்
1. நிகழ் காலம் : PLEASE TAKE REST 
2. தொடர் நிகழ் காலம் : YOU ARE NOW TAKING REST 
3. இறந்த காலம் (active voice ) : YOU TOOK REST 
4. இறந்த காலம் (passive voice-ல் ): REST எனும் வார்த்தையை passive voice -ல் மாற்ற முடியாது; 
அதைப் போலவே தான், "sleep", "walk", "run", "sit", "cry", "laugh", "stand",  "wait", "go",  "arrive", "die",  "sneeze", "swim", "dance", "shine",  "grow", "fade", "fluctuate", "deteriorate", "vote", "increase" போன்றவற்றிற்கு  passive verb இல்லை  

ஆகவே, மேலே 4 வது உதாரணத்தில் REST வார்த்தைக்கு பதில்  வேறு உதாரணம் இதோ : "YOU TOOK NOTEBOOK" என்பது "NOTEBOOK WAS TAKEN BY YOU". என்று மாற்றி சொல்லலாம். 

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்: மேலேயும் கீழேயும்,  24 வடிவங்களில் உள்ள ஒரு வெர்ப் (வினை சொல்) க்கு , வெறும் நான்கு வடிவத்தில் மட்டுமே விளக்கம் சொல்லியுள்ளது. மீதி 20 வடிவம் என்ன என்பதை  நீங்கள் தான் கண்டு பிடித்து தெரிந்து கொள்ளவேண்டும். புரிகிறதா ?  

இந்த பாடம் உங்களுக்கு பிறகு பிரிண்ட் செய்யப்பட்டு தரப் படும்.. .. ..